உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / பரமத்தி அருகே அடிதடி தகராறு: 3 பேர் கைது

பரமத்தி அருகே அடிதடி தகராறு: 3 பேர் கைது

ப.வேலுார்: பரமத்தி அருகே, ஒழுகூர் பட்டியை சேர்ந்தவர் தனச்செல்வன், 44; லாரி டிரைவர். இவரது பக்கத்து வீட்டை சேர்ந்தவர் செட்டியார், 47. இருவருக்கும் முன் விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை மீண்டும் இருவருக்குள்ளும் வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. அப்போது, அங்கு வந்த செட்டியார் மகன் விஜய், 27, உறவினர் மணி, 38 ஆகிய மூவரும் சேர்ந்து, தனச்செல்வனை சரமாரியாக தாக்கினர். இதில், படுகாயமடைந்த தனச்செல்வனை அருகில் இருந்தவர்கள் மீட்டு, ப.வேலுார் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். இதுகுறித்து புகார்படி, பரமத்தி போலீசார், செட்டியார், மகன் விஜய், உறவினர் மணி ஆகிய மூவரையும் கைது செய்தனர்.

மாவட்டத்தில் 64 மி.மீ., மழை

நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில், நேற்று முன்தினம் மாலை பரவலாக மழை பெய்தது. பல இடங்களில் துாறல் மழை பெய்தது. நேற்று காலை நிலவரப்படி, குமாரபாளையத்தில், 46.4, புதுச்சத்திரம், 1, கொல்லிமலையில், 17 மி.மீட்டர் மழை பதிவாகியிருந்தது. மாவட்டம் முழுதும், 64.4 மி.மீட்டர் மழை பெய்திருந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி