உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / ஷவர்மா சாப்பிட்ட மாணவி பலி கலெக்டர் பதிலளிக்க உத்தரவு

ஷவர்மா சாப்பிட்ட மாணவி பலி கலெக்டர் பதிலளிக்க உத்தரவு

நாமக்கல்:நாமக்கல் எஸ்.பி.,புதுாரைச் சேர்ந்த, மறைந்த தவக்குமார் என்பவரின் மனைவி சுஜாதா, 42. இவர்களது மகள் கலையரசி. 2023 செப்டம்பரில், நாமக்கல் நகரில் இருந்த ஹோட்டலில் சிக்கன் ஷவர்மா வாங்கி வந்து குடும்பத்துடன் சாப்பிட்டனர். குழந்தைகள் இருவருக்கும் வாந்தி, பேதி ஏற்பட்டது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதில், கலையரசி இறந்தார்.அந்த ஹோட்டலில், அதே நாளில் சாப்பிட்ட, 43 பேருக்கும் உடல்நலம் பாதிக்கப்பட்டது. இதையடுத்து, சுஜாதா, தன் மகள் இறப்புக்கு, 50 லட்சம் ரூபாய் இழப்பீடு கேட்டு நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில் அவர் கூறியுள்ளதாவது:கலையரசியின் இறப்பிற்கு ஈடாக, 50 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும். மேலும், அந்த ஹோட்டலில் உணவருந்திய 43 பேருக்கும் வழங்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறியிருந்தார்.இதையடுத்து, ஜூலை 19ம் தேதி ஹோட்டல் உரிமையாளர், மாவட்ட கலெக்டர் மற்றும் மாவட்ட உணவுப் பாதுகாப்பு அலுவலர் பதிலளிக்க வேண்டும் என, மாவட்ட நுகர்வோர் நீதிமன்ற நீதிபதி ராமராஜ் மற்றும் உறுப்பினர் ரமோலா நேற்று உத்தரவிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை