உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / முத்துக்காப்பட்டி பஞ்.,ல் இன்று பாதை அளவீடு

முத்துக்காப்பட்டி பஞ்.,ல் இன்று பாதை அளவீடு

சேந்தமங்கலம்: சேந்தமங்கலம் அருகே, முத்துக்காப்பட்டி பஞ்., மேதரமாதேவியில் இருந்து சாலப்பாளையம் வரை செல்லும் சாலையை அளவீடு செய்து கொடுக்க வேண்டும் என, பஞ்., தலைவர் கோரிக்கை விடுத்து வந்தார். இதனால், கடந்த, 5ல் வருவாய் துறையினர், போலீசார் இந்த சாலையை அளவிடும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்ததால் பணி பாதியில் முடிந்தது. இதனால், பஞ்., தலைவர் அருள்ராஜேஸ், ஆர்.ஐ., அலுவலகம் முன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால், நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டார். இந்நிலையில், இந்த சர்ச்சைக்குரிய பாதை, இன்று காலை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அளவிடும் பணியில் வருவாய் துறையினர் ஈடுபட உள்ளனர். இதனால், முத்துக்காப்பட்டி பஞ்.,ல் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை