உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / மது போதையில் லாரி ஓட்டியதால் விபத்து

மது போதையில் லாரி ஓட்டியதால் விபத்து

நாமகிரிப்பேட்டை: சேலம் மாவட்டம், ஆத்துாரில் இருந்து, ராசிபுரம் நோக்கி சவுக்கு லோடு லாரி, நேற்று மாலை சென்று கொண்டிருந்தது. லாரியை கல்லணம் பகுதியை சேர்ந்த விஜி, 45, ஓட்டிச்சென்றார். இவர் மது போதையில் இருந்துள்ளார். காக்காவேரி கிராமத்தில் வேகமாக வந்த லாரி, வளைவான சாலையில் திரும்ப முடியாமல் வீட்டின் மீது மோதி கவிழ்ந்தது. இதனால், வீட்டின் சுவர் சேதமடைந்தது. லாரி கவிழந்ததால், அரை மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. காயமடைந்த லாரி டிரைவர் விஜியை அக்கம் பக்கத்தினர் மீட்டு, ராசிபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். நாமகிரிப்பேட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி