உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / நின்ற லாரி மீது டூவீலர் மோதி மெக்கானிக் பலி

நின்ற லாரி மீது டூவீலர் மோதி மெக்கானிக் பலி

நின்ற லாரி மீது டூவீலர் மோதி மெக்கானிக் பலி குமாரபாளையம், ஆக. 22-ஈரோடு மாவட்டம், பவானி, காளிங்கராயன்பாளையத்தை சேர்ந்தவர் திலிப்குமார், 34; மெக்கானிக். இவரது மனைவி பரஞ்சோதி, 32. நேற்று முன்தினம் மாலை, 2:15 மணிக்கு, திலிப்குமார், தன் முதலாளியை பார்க்க, 'ஹீரோ ஹோண்டா ஸ்பிளண்டர்' டூவீலரில் சென்றார். சேலம் - கோவை புறவழிச்சாலை, அருவங்காடு பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது, பழுதாகி சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த, 'ஈச்சர்' லாரி மீது மோதினார். இதில், படுகாயமடைந்த திலிப்குமாரை, அருகில் இருந்தவர்கள் மீட்டு, ஈரோடு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த திலிப்குமார், நேற்று அதிகாலை, 3:50 மணிக்கு உயிரிழந்தார். குமாரபாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை