உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / அரசு வேலை வாங்கி தருவதாக மோசடி ரூ.5 லட்சத்தை சுருட்டிய வாலிபர் கைது

அரசு வேலை வாங்கி தருவதாக மோசடி ரூ.5 லட்சத்தை சுருட்டிய வாலிபர் கைது

நாமக்கல்: அரசு வேலை வாங்கி தருவதாக, ஐந்து லட்சம் ரூபாய் மோசடி செய்த, சேலம் வாலிபரை போலீசார் கைது செய்தனர்.நாமக்கல் மாவட்டம், செல்லப்பம்பட்டியை சேர்ந்தவர் மாதேஸ்வரி, 37; தனியார் நர்சிங் பள்ளியில் துாய்மை பணியாளர். இவருக்கு, அல்லிமுத்து என்பவர் மூலம், சேலம் மாவட்டம், இடைப்பாடியை சேர்ந்தவர் அஜீத்குமார், 28, என்பவர் பழக்கம் ஏற்பட்டது. இவர், மாதேஸ்வரியின் தம்பிக்கு அரசு வேலை வாங்கி தருவதாக கூறி, 2019 ஜன.,யில், முதல் தவணையாக, 1.50 லட்சம் ரூபாய் பெற்றுள்ளார். தொடர்ந்து, சேலம், அஸ்தம்பட்டியில் உள்ள வங்கி கணக்கு மூலம், இரண்டு லட்சம் ரூபாய், வீட்டிற்கு நேரில் சென்று, 1.50 லட்சம் ரூபாய் என, மொத்தம், ஐந்து லட்சம் ரூபாயை, அஜீத்குமார் பெற்றுள்ளார். ஆனால், 2023 வரை வேலை வாங்கித்தரவில்லை. இதனால் மாதேஸ்வரி, பணத்தை திருப்பி தரும்படி, அஜித்குமாரிடம் பலமுறை கேட்டுள்ளார். ஆனால், பணம் தராமல் ஏமாற்றி வந்துள்ளார். இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை, 5:00 மணிக்கு, செல்லப்பம்பட்டியில் உள்ள மாதேஸ்வரி வீட்டுக்கு, மீண்டும் பணம் கேட்டு அஜீத்குமார் சென்றுள்ளார். அப்போது, உஷாரான மாதேஸ்வரி, அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள், உறவினர்கள் உதவியுடன், அஜீத்குமாரை பிடித்து, நல்லிபாளையம் போலீசில் ஒப்படைத்தார். போலீசார் அஜீத்குமாரை கைது செய்து, தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ