உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / காளியம்மன் கோவிலில் 108 கலச அபிஷேகம்

காளியம்மன் கோவிலில் 108 கலச அபிஷேகம்

மோகனுார்: மோகனுாரில் பிரசித்தி பெற்ற காளியம்மன், நவலடி கருப்பண்ண சுவாமி, மாரியம்மன் கோவில்கள் உள்ளன. இக்கோவில் கும்பாபிஷேகம் முடிந்து, 6ம் ஆண்டு விழாவை முன்னிட்டு சிறப்பு யாகம், 108 கலச அபிஷேக ஆராதனை, நேற்று விமர்சையாக நடந்தது. நவலடி கருப்பண்ண சுவாமி கோவிலில், காலை, கணபதி ஹோமத்துடன் சிறப்பு பூஜை நடந்தது. தொடர்ந்து, சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடந்தது.மேலும், செல்லாண்டி அம்மனுக்கு வெள்ளிக்கவச அலங்காரம், மஹா தீபம், மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், வெள்ளிக்கவச அலங்காரம், மஹா தீபம் காட்டப்பட்டது. காளியம்மன் கோவில் முன், 108 கலசம் சிறப்பு யாகம் வளர்க்கப்பட்டு, தீர்த்த அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, காளியம்மன் வெள்ளிக்கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி