உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / 14வது வாரம் திருக்குறள் பயிற்சி

14வது வாரம் திருக்குறள் பயிற்சி

ராசிபுரம், ராசிபுரம் பள்ளி மாணவர்களுக்கு, 14வது வாரமாக திருக்குறள் பயிற்சி அளிக்கப்பட்டது.திருக்குறள் திருப்பணிகள் திட்டத்தின், 14வது வாரமாக ராசிபுரம் தமிழ் கழகம் சார்பில், பாரதிதாசன் சாலை நகராட்சி நடுநிலை பள்ளியில் மாணவர்களுக்கு பயிற்சி நடந்தது. தலைமை ஆசிரியர் பாரதி வரவேற்றார். பள்ளி துணை ஆய்வாளர், ராசிபுரம் தமிழ் கழகத்தின் செயலாளர் பெரியசாமி தலைமை வகித்தார். ராசிபுரம் நகராட்சி தலைவர் கவிதா கலந்துகொண்டார். முதன்மை கருத்தாளர்களாக ரீகன், வாகை மனோஜ்குமார் ஆகியோர் கல்வி, கல்லாமை இந்த, இரண்டு அதிகாரத்தையும் இசையுடன் நளினத்துடன் மாணவர்களுக்கு பயிற்றுவித்தனர்.கரூர், நன்னியூர் ராஜேந்திரன் திருக்குறள் கற்றுக்கொள்ள வந்த குழந்தைகளிடம் திருக்குறள் குறித்து கேட்டறிந்தார். முடிவில் ஆசிரியர் கவிதா நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை