உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / லாரியில் கடத்தி வரப்பட்ட 270 கி., புகையிலை பறிமுதல்

லாரியில் கடத்தி வரப்பட்ட 270 கி., புகையிலை பறிமுதல்

நாமக்கல்: நாமக்கல் வழியாக லாரியில் குட்கா கடத்தி செல்வதாக, மாவட்ட எஸ்.பி., விமலாவுக்கு தகவல் கிடைத்தது. அவரது உத்தரவுப்படி, எஸ்.ஐ., சுந்தரம் மற்றும் போலீசார், நேற்று காலை, 11:00 மணிக்கு, நாமக்கல்-சேலம் சாலையில், திடீர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.அப்போது, துறையூர் நோக்கி சென்ற லாரியை மடக்கி சோதனை செய்தனர். சோதனையில், தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட போதை பொருளான, குட்கா கடத்தி செல்வது கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து, லாரியில் கடத்தி வரப்பட்ட ஸ்வாகட், ஹான்ஸ், கூல்லிப், பான்மசாலா என, 270 கிலோ எடை கொண்ட, குட்கா பொருட்களை லாரியுடன் பறிமுதல் செய்தனர். அவற்றின் மதிப்பு, 1.57 லட்சம் ரூபாய்.மேலும், இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட லாரியை ஓட்டி வந்த மோகனுார் தாலுகா, பரளி நல்லையம்பட்டியை சேர்ந்த முருகேசன், 49, என்பவரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை