மேலும் செய்திகள்
பஸ் ஓட்டுநருக்கு மாரடைப்பு தப்பிய பயணியர்
21-Jan-2025
பள்ளிப்பாளையம்: பள்ளிப்பாளையம் அருகே, கோவிந்தம்பாளையத்தை சேர்ந்தவர் அன்பழகன், 36; ஆட்டோ டிரைவர். இவர், நேற்று இரவு கீழ்கா-லனி பகுதியில் நண்பருடன் மது அருந்தி கொண்டிருந்தார். இதேபோல், காடச்சநல்லுாரை சேர்ந்த சசிகுமார், 39, கோபால், 32, சத்தியமூர்த்தி, 27, ஆகிய மூவரும், அப்பகுதியில் மது அருந்தி கொண்டிருந்தனர். அப்போது, அன்பழகனுக்கும், மற்ற மூவ-ருக்கும் தகராறு ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த மூவரும், மது பாட்டிலால் அன்பழகனை தாக்கியுள்ளனர். இதில் தலையில் படுகாயமடைந்த அன்பழகன், ஈரோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து புகார்படி, பள்ளிப்பாளையம் போலீசார், சசிகுமார், கோபால், சத்-தியமூர்த்தி ஆகிய மூவரை கைது செய்தனர்.
21-Jan-2025