| ADDED : மார் 18, 2024 03:24 AM
நாமக்கல்: நாமக்கல், பரமத்தி அருகே உள்ள பி.ஜி.பி., கலை அறிவியல் கல்லுாரிக்கு தன்னாட்சி அங்கீகாரம் வழங்கல், 30ம் ஆண்டு நிறைவு விழா, கல்லுாரி வளாகத்தில் கொண்டாடப்பட்டது. தாளாளர் கணபதி வரவேற்றார். பி.ஜி.பி., கல்வி குழும துணைத்தலைவர் விசாலாட்சி பெரியசாமி சிறப்புரையாற்றினார். பி.ஜி.பி., குழும தலைவர் பழனி ஜி பெரியசாமி தலைமை வகித்து பேசுகையில், ''வரும், 2024 - -25ம் கல்வி ஆண்டு முதல், தன்னாட்சி கல்லுாரியாக செயல்படும் இந்த தன்னாட்சியின் கீழ் பல்வேறு வகையான ஆராய்ச்சி பிரிவுகள் மற்றும் புதிய பாடப்பிரிவுகள் காலத்திற்கு ஏற்றார்போல் தொடங்கப்படும். தன்னாட்சி கல்லுாரியின் சிறப்பு அம்சங்கள் குறித்தும், நாமக்கல் பகுதியில் எதிர்கால வளர்ச்சியை மேம்படுத்த, புதிய கல்வி பாடப்பிரிவுகள் அறிமுகப்படுத்தப்படும். கூடிய விரைவில் பல்கலையாக மாற்றப்படும். அதற்கான பணிகள் தொடங்கி விட்டன,'' என்றார்.இங்கு பயின்ற, 3,000க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் உலகெங்கும் பணிபுரிந்து வருகின்றனர். பி.ஜி.பி., கல்லுாரி முதல்வர்கள், பேராசிரியர்கள், மாணவ, மாணவியர் உள்பட பலர் கலந்து கொண்டனர். இறுதியில் கலைக்கல்லுாரி முதல்வர் மகேஸ்வரன் நன்றி தெரிவித்தார்.