மேலும் செய்திகள்
நாமக்கல் உழவர் சந்தையில் 30 டன் காய்கறி விற்பனை
25-Nov-2024
நாமக்கல்:நாமக்கல் உழவர் சந்தையில், நேற்று ஒரே நாளில், 32 டன் காய்-கறி, பழங்கள், 13.83 லட்சம் ரூபாய்க்கு விற்பனையாகின.நாமக்கல் கோட்டை மெயின் சாலையில், உழவர் சந்தை செயல்-பட்டு வருகிறது. தினமும், காலை, 5:00 முதல், 10:00 மணி வரை, நாமக்கல் பகுதியில் உள்ள விவசாயிகள் தங்கள் தோட்டங்-களில் விளைந்த காய்கறி, பழங்களை கொண்டு வந்து நேரடியாக விற்பனை செய்கின்றனர்.பொதுமக்கள் உழவர் சந்தைக்கு வந்து, தங்களுக்கு தேவையான காய்கறிகளை வாங்கி செல்கின்றனர். வழக்கமாக, வார விடு-முறை நாட்களான சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் அதிகமான வாடிக்கையாளர்கள் உழவர் சந்தைக்கு வந்து காய்கறி, பழங்களை வாங்கி செல்வது வழக்கம்.தற்போது, கார்த்திகை மாதம் என்பதால், ஐயப்பன் கோவிலுக்கு செல்வதற்காக விரதம் மேற்கொள்ளும் பலர் அசைவத்தை கைவிட்டு, சைவத்திற்கு மாறியுள்ளனர். இதனால், நேற்று வழக்-கத்தை விட உழவர் சந்தையில் விறுவிறுப்பாக வியாபாரம் நடந்-தது.மொத்தம், 203 விவசாயிகள் உழவர் சந்தைக்கு காய்கறி, பழங்-களை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். 26,880 கிலோ காய்-கறிகள் மற்றும் 5,405 கிலோ பழங்கள், 10 கிலோ பூக்கள் என மொத்தம், 32,295 கிலோ எடையுள்ள விளைபொருட்கள் உழவர் சந்தைக்கு கொண்டுவரப்பட்டு விற்பனை செய்யப்பட்டன. அவற்றின் மூலம், 13 லட்சத்து, 83,580 ரூபாய்க்கு விற்பனையானது.
25-Nov-2024