உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / ராசிபுரத்தில் 5 கோடி ரூபாயில் வணிக வளாகம்

ராசிபுரத்தில் 5 கோடி ரூபாயில் வணிக வளாகம்

ராசிபுரம்: ராசிபுரம் பழைய பஸ் நிலையத்தில், கலைஞர் நகர் புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ், 5.86 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஈரடுக்கு வாகன நிறுத்தத்துடன் கூடிய, வணிக வளாகம் கட்ட அடிக்கல் நாட்டு விழா நடந்தது. காணொலி காட்சி வாயிலாக முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். அதனை தொடர்ந்து வனத்துறை அமைச்சர் மதிவேந்தன், ராசிபுரம் நகராட்சி தலைவர் கவிதா உள்ளிட்டோர் அடிக்கல் நாட்டினர். இதையடுத்து அமைச்சர் மதிவேந்தன் பேசுகையில்,'' ராசிபுரம் மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்து வந்த வணிக வளாகம் தற்போது, தி.மு.க., ஆட்சி வந்தவுடன் நிறைவேற்றி உள்ளோம். வணிக வளாகத்திற்கு உள்ளேயே பார்க்கிங் வசதி உள்ளது. இதன் மூலம் நகர் பகுதியில் போக்குவரத்து பாதிப்பை தவிர்க்க முடியும்,'' என்றார். இந்நிகழ்ச்சியில் தி.மு.க., நகர செயலர் சங்கர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை