உள்ளூர் செய்திகள்

6 ஆடுகள் பலி

ராசிபுரம்: ராசிபுரம் அடுத்த பிள்ளாநல்லுார் ஊர் கிணறு பகுதியை சேர்ந்தவர் கணேசன், 54; விவசாயி. இவர், 15க்கும் மேற்பட்ட ஆடு, மாடுகளை வளர்த்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு, வழக்கம் போல் ஆடு, மாடுகளை கொட்டகையில் கட்டி வைத்திருந்தார்.நேற்று காலை சென்று பார்த்தபோது, 6 ஆடுகள் மர்ம விலங்கு கடித்து இறந்திருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். தகவலறிந்த கால்நடை மருத்துவர்கள், சம்பவ இடத்திற்கு சென்று உயிரிழந்த ஆடுகளை பரிசோதனை செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை