மேலும் செய்திகள்
ரூ.24 லட்சத்துக்கு பருத்தி வர்த்தகம்
08-Oct-2025
தொடர் மழையால் மஞ்சள் ஏலம் ரத்து
08-Oct-2025
மயங்கி விழுந்த மூதாட்டி பலி
08-Oct-2025
எலச்சிபாளையம்: கொன்னையார் கிராமத்தில் சிதிலமடைந்த சமுதாய கூடத்தை, மக்கள் அச்சத்துடன் பயன்படுத்தி வருகின்றனர்.எலச்சிபாளையம் அருகே, கொன்னையார் கிராமத்தில், கடந்த, 20 ஆண்டுகளுக்கு முன் சமுதாயகூடம் கட்டப்பட்டது. சுற்றுவட்டாரத்தை சேர்ந்த மக்கள், தங்கள் வீட்டு விசேஷங்களை, இந்த சமுதாய கூடத்தில் நடத்தி வந்தனர். தற்போது, இந்த சமுதாய கூடத்தின் மேற்கூரையில் கான்கிரீட்கள் பெயர்ந்து, கம்பிகள் வெளியே தெரிகின்றன. இதனால், விசேஷ நிகழ்ச்சிகளின் போது இங்கு வரும் பொதுமக்கள், ஏதாவது அசம்பாவிதம் ஏற்பட்டுவிடுமோ என்ற பயத்திலேயே கடந்து செல்கின்றனர். எனவே, சிதிலமடைந்துள்ள சமுதாய கூடத்தை புனரமைக்க வேண்டும் என, பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
08-Oct-2025
08-Oct-2025
08-Oct-2025