உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / பல ஆண்டுகளாக கிடப்பில் உள்ள பொது சுத்திகரிப்பு நிலையம்

பல ஆண்டுகளாக கிடப்பில் உள்ள பொது சுத்திகரிப்பு நிலையம்

பள்ளிப்பாளையம்:பல ஆண்டுகளாக, பொது சுத்திகரிப்பு நிலையம் திட்டம் இழுபறியாக உள்ளதால், எப்போது நிறைவேறும் என, பள்ளிப்பாளையம் சுற்றுவட்டார சாய ஆலை உரிமையாளர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.பள்ளிப்பாளையம் பகுதியில், ஏராளமான சாய ஆலைகள் செயல்பட்டு வருகின்றன. ஒரு சில சாய ஆலைகள் மட்டுமே, சுத்தகரிப்பு நிலையம் வைத்து தொழில் நடத்தி வருகின்றன. பெரும்பாலான சாய ஆலைகள் விதிமுறைகளை மீறி, கழிவுகளை நேரடியாக வெளியேற்றுவதால், காவிரி ஆற்றில் கலந்து தண்ணீர் மாசுடைந்து வருகிறது.விதிமுறை மீறி செயல்படும் சாய ஆலைகளை, பொக்லைன் மூலம் அகற்றி வருவதும், சீல் வைப்பு, மின் இணைப்பு துண்டிப்பு போன்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இருந்தாலும் இந்த நிலை தொடர்ந்து கொண்டுதான் உள்ளது. இதனால் சாய ஆலை உரிமையாளர்கள் தொடர்ந்து இயக்க, அரசிடம் பொது சுத்திகரிப்பு நிலையம் அமைத்து தர கோரிக்கை விடுத்தனர். இது, 10 ஆண்டுக்கு மேலாக நீடித்து வருகிறது. எப்போது அமையும் என, சாய ஆலை உரிமையாளர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை