உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / ஆதிதிராவிடர் நலப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்கணும்

ஆதிதிராவிடர் நலப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்கணும்

நாமக்கல்: நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில், நடப்பு கல்வியாண்டில், ஆதிதிராவிடர் நலப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறித்த ஆய்வு கூட்டம் நடந்தது. கலெக்டர் உமா தலைமை வகித்தார்.தொடர்ந்து அவர் பேசியதாவது:நாமக்கல் மாவட்டத்தில், ஆதிதிராவிடர் நலத்துறை மூலம், ஐந்து தொடக்கப்பள்ளிகள், ஒரு உயர்நிலைப்பள்ளி, ஒரு மேல்நிலைப்பள்ளி என, மொத்தம், ஏழு பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. 2023-24ம் கல்வியாண்டில், பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில், அ.பாலப்பட்டி, அரசு ஆதிதிராவிடர் நல உயர்நிலைப்பள்ளியில் படித்த மாணவர்கள், 100 சதவீதம் தேர்ச்சியடைந்தனர்.ஆதிதிராவிடர் நலப்பள்ளிகளில் பள்ளி குழந்தைகளுக்கு அரசு வழங்கும் விலையில்லா பாட நுால்கள், பாட குறிப்புகள், நான்கு இணை சீருடைகள், புத்தக பை, வண்ண பென்சில்கள், காலணிகள், கிரையான்ஸ், நில வரைபடம் ஊக்கத்தொகை உள்பட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகின்றன. அதனால், பெற்றோர் தங்கள் குழந்தைகளை அருகாமையில் உள்ள ஆதிதிராவிடர் நலப்பள்ளிகளில் சேர்க்க முன் வரவேண்டும். நடப்பு கல்வியாண்டில், ஆதிதிராவிடர் நலப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க, ஆசிரியர்கள், தலைமையாசிரியர்கள் பணியாற்ற வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை