மேலும் செய்திகள்
ரூ.24 லட்சத்துக்கு பருத்தி வர்த்தகம்
08-Oct-2025
தொடர் மழையால் மஞ்சள் ஏலம் ரத்து
08-Oct-2025
மயங்கி விழுந்த மூதாட்டி பலி
08-Oct-2025
நாமகிரிப்பேட்டை: நாமகிரிப்பேட்டை, ஐயப்பன் நகரை சேர்ந்தவர் பொன்னுசாமி, 64. இவர், 20 ஆண்டுக்கு முன் வெளியூர் சென்றார். இவருக்கு ஒரு மகள் உள்ளார். அவர், திருச்சியில் உள்ள உறவினருக்கு திருமணம் செய்து வைத்துார். ஐயப்பன் நகரில் உள்ள வீட்டை, ராசிபுரம் அடுத்த சிங்களாந்தபுரத்தை சேர்ந்த நாகரத்தினம், 65, என்பவருக்கு போகியத்திற்கு விட்டிருந்தார். கணவரை இழந்த நாகரத்தினம் தனியாக வசித்து வந்தார். சில ஆண்டுக்கு முன் சொந்த ஊருக்கு வந்த பொன்னுசாமி, வீட்டை காலி செய்து கொடுக்கும்படி நாகரத்தினத்தை கேட்டுள்ளார். ஆனால், நாகரத்தினம் வீட்டை காலி செய்யவில்லை. இந்நிலையில், ஜூன் முதல் வாரம் நாகரத்தினம், வீட்டில் அடித்து கொலை செய்யப்பட்டு கிடந்தார். நாமகிரிப்பேட்டை போலீசார் விசாரணையில், புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த முத்து மகன் சதீஷ், 31, சேலம் மாவட்டத்தை சேர்ந்த முருகேசன் மகன் சுரேஷ், 24 ஆகிய இருவர், நாகரத்தினத்தை கொலை செய்தது தெரிந்தது. அவர்களை, நாமகிரிப்பேட்டை இன்ஸ்பெக்டர் பிரபாவதி, கடந்த, 10ல் கைது செய்தார். தலைமறைவாக இருந்த, கொலைக்கு காரணமான பொன்னுசாமி, மகள், மருமகன் ஆகியோரை போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில், நேற்று திருச்செங்கோடு, தேவனாங்குறிச்சி பகுதியில் மறைந்திருந்த பொன்னுசாமியை போலீசார் கைது செய்து சிறையிலடைத்தனர்.
08-Oct-2025
08-Oct-2025
08-Oct-2025