உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / புதிய மொபைல் போனை வாங்க மறுத்த காதலி: காதலன் துாக்கிட்டு தற்கொலை

புதிய மொபைல் போனை வாங்க மறுத்த காதலி: காதலன் துாக்கிட்டு தற்கொலை

சேந்தமங்கலம் ;புளியஞ்சோலை வனப்பகுதியில், காதல் ஜோடிக்கு இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தால், ஆத்திரம் தாங்காத காதலன், காதலியின் துப்பட்டாவால் துாக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நாமக்கல் மாவட்டம், கொல்லிமலை யூனியன், கடமலம்பட்டியை சேர்ந்தவர் விமல், 23; கூலித்தொழிலாளி. இவர், நேற்று முன்தினம் மாலை, கொல்லிமலை அடிவாரத்தில் உள்ள புளியஞ்சோலை, தங்க நகர் வனப்பகுதியில் உயிரிழந்து கிடப்பதாக, செம்மேடு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அங்கு சென்ற போலீசார், உயிரிழந்த வாலிபரின் உடலை மீட்டு விசாரணையில் ஈடுபட்டனர்.அதில், புளியஞ்சோலை அருகே, தங்க நகர் பகுதியை சேர்ந்த இளம் பெண்ணும், விமலும், கடந்த, மூன்றாண்டாக காதலித்து வந்துள்ளனர். நேற்று முன்தினம், இருவரும் வனப்பகுதியில் சந்தித்துள்ளனர். அப்போது, காதலன் விமல், காதலிக்கு புதிய மொபைல் போன் வாங்கி கொடுத்துள்ளார். ஆனால், வீட்டில் தெரிந்தால் பிரச்னையாகி விடும் என்பதால், அந்த மொபைல் போனை வாங்க காதலி மறுத்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் காதலி கோபித்துக்கொண்டு அங்கிருந்து சென்றுவிட்டார். ஆத்திரம் தாங்காத விமல், காதலியின் துப்பட்டாவை கொண்டு, அருகில் இருந்த மரத்தில் துாக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது. இதுகுறித்து அந்த பெண்ணிடம் போலீசார், தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை