குட்கா விற்பனை 4 பேர் மீது வழக்கு
பள்ளிப்பாளையம்: பள்ளிப்பாளையம் பகுதியில் மளிகை கடைகளில் குட்கா விற்ப-தாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, நேற்று மாலை பள்ளிப்பாளையம் போலீசார், பாப்பம்பாளையம், அப்பி-நாய்க்கன்பாளையம், விளாங்காட்டூர், புதுப்பாளையம் காட்டூர் ஆகிய பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர்.அப்போது, மளிகை கடைகளில் குட்கா விற்பனை செய்த நடராஜ், 74, சுப்ரமணி, 64, கந்தசாமி, 62, மகேந்திரன், 47, ஆகிய 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இவர்களிடம் இருந்து, 1 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டது.