உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / காளிப்பட்டி கந்தசாமி கோவிலில் தேரோட்ட விழா

காளிப்பட்டி கந்தசாமி கோவிலில் தேரோட்ட விழா

மல்லசமுத்திரம்: காளிப்பட்டி கந்தசாமி கோவிலில் இன்று தைப்பூச தேரோட்ட விழா நடக்கிறது. இதையொட்டி, 200 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.சேலம் -- -நாமக்கல் மாவட்ட எல்லையில், பிரசித்தி பெற்ற காளிப்பட்டி கந்தசாமி கோவில் அமைந்துள்ளது. இங்கு, இன்று மதியம், 3:15 மணிக்கு, தைப்பூச தேரோட்ட விழா வெகுவிமரிசையாக நடக்கிறது. விழாவையொட்டி, பாதுகாப்பு பணியல், ராசிபுரம் டி.எஸ்.பி., விஜயகுமார் தலைமையில், ஒரு ஏ.டி.எஸ்.பி., - 3 டி.எஸ்.பி., 7 இன்ஸ்பெக்டர்கள், 17 எஸ்.ஐ.,க்கள், என, 200 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ஹிந்து சமய அறநிலையத்துறை சார்பில், நாமக்கல் உதவி கமிஷனர் சாமிநாதன் தலைமையில், அறநிலையத்துறையை சேர்ந்த, 2 இன்ஸ்பெக்டர்கள், 5 செயல் அலுவலர்கள் பணியில் ஈடுபட்டுள்ளனர். அதுமட்டுமல்லாது, ஆங்கிலேயர் காலம் முதல் நடந்துகொண்டிருக்கும் தற்காலிக நீதிமன்றம், திருச்செங்கோடு குற்றவியல் நீதிமன்ற நீதிபதி நடுவர் சுரேஷ்பாபு தலைமையில், நேற்று அமைக்கப்பட்டது. முதல் நாளான நேற்று, 69 வழக்குகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. மேலும், தீயணைப்புதுறை, மின்சாரத்துறை, மருத்துவத்துறை, டவுன் பஞ்., நிர்வாகம் என, பல்வேறு துறைகளை சார்ந்த பணிகளை மேற்கொள்ள தனித்தனி அறைகள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்