உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / முடிவுக்கு வந்த சாலை அளவீடு பணி

முடிவுக்கு வந்த சாலை அளவீடு பணி

சேந்தமங்கலம்: சேந்தமங்கலம் அருகே, முத்துக்காப்பட்டி பஞ்., மேதரமாதேவியில் இருந்து சாலப்பாளையம் பிரிவு சாலை வரை, 2.05 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு, சாலை அமைக்கும் பணி, கடந்த, மூன்று மாதத்திற்கு முன் துவங்கியது. இந்த சாலை அமைக்கும் பணி, மேதரமாதேவி அருகே சென்ற போது, சாலை அளவீடு செய்ய எதிர்ப்பு தெரிவித்ததால், மூன்று முறை சாலை அமைக்கும் பணி நிறுத்தப்பட்டது.இந்நிலையில், நேற்று சேந்தமங்கலம் தாசில்தார் சத்திவேல் தலைமையில், வருவாய் துறையினர் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சாலையை அளவீடு செய்து முடித்தனர். இதனால், பாதியில் நிறுத்தப்பட்ட சாலை அமைக்கும் பணி மீண்டும் துவங்கியது. இந்த சாலையை அளவீடு செய்ய பஞ்., தலைவர் அருள்ரா‍ஜேஸ் பல்வேறு போராட்டங்கள் நடத்திய நிலையில், வருவாய் துறையினர் சாலையை அளவீடு செய்து முடித்ததால், பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை