| ADDED : செப் 13, 2011 02:01 AM
பள்ளிபாளையம்: பள்ளிபாளையம் அருகே தனியார் பஸ், பைக் மீது மோதிய விபத்தில்,
விசைத்தறி உரிமையாளர் ஒருவர் உட்பட இருவர் பரிதாபமாக பலியாகினர். பள்ளிபாளையம் அருகே உள்ள ஆண்டிக்காட்டை சேர்ந்தவர் விசைத்தறி உரிமையாளர்
பூபதி (40). நேற்று இரவு 7.30 மணியளவில், சேலம் மெயின்ரோடு வழியாக தனது
பைக்கில் சங்ககிரி சென்றுள்ளார். வெடியரசம்பாளையம் என்ற இடத்தில்
சென்றபோது, எதிரே சேலத்திலிருந்து, ஈரோடு நோக்கிச் சென்ற 'ஏ.எம்.வி.ஜி.,'
என்ற தனியார் பஸ், பூபதி பைக் மீதும், அப்பகுதியில் நடந்து சென்றவர் மீதும்
மோதியது. அந்த விபத்தில், நடந்து சென்ற நபர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக
பலியானார். ஈரோடு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பூபதி, அங்கு
சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். நடந்து சென்ற நபர் யார் என்ற
விவரம் தெரியவில்லை. விபத்து குறித்து, பள்ளிபாளையம் போலீஸார் வழக்கு பதிவு
செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.