உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / டூவீலர் திருடிய வாலிபர்கள் கைது: 5 வாகனம் பறிமுதல்

டூவீலர் திருடிய வாலிபர்கள் கைது: 5 வாகனம் பறிமுதல்

திருச்செங்கோடு: டூவீலர் திருடிய இரண்டு வாலிபர்களை, திருச்செங்கோடு போலீஸார் கைது செய்து, அவர்களிடம் இருந்து, 1.50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஐந்து வாகனங்களை பறிமுதல் செய்தனர். திருச்செங்கோட்டில், கடந்த சில மாதங்களாக பல்வேறு பகுதிகளில் டூவீலர்கள் திருடு போனது. திருடர்களை பிடிப்பதற்காக, டவுன் இன்ஸ்பெக்டர் கருணாநிதி, எஸ்.ஐ.,க்கள் ராஜேந்திரன், ராஜா, மதி மற்றும் போலீஸார் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டு, பல்வேறு இடங்களில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்தனர். நேற்று முன்தினம் இரவு 8 மணிக்கு, சேலம் சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக டூவீலரில் வந்த இரண்டு வாலிபர்கள், போலீஸாரை பார்த்ததும் பைக்கை அப்படியே போட்டுவிட்டு ஓட்டம் பிடித்தனர். அவர்களை போலீஸார் துரத்திச் சென்று பிடித்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், திருச்செங்கோடு அடுத்த கைலாசம்பாளையத்தை சேர்ந்த விசைத்தறி தொழிலாளிகள் பிரகாஷ் (33), வாசுதேவன் (24) என்பது தெரியவந்தது. திருச்செங்கோடு பகுதியில் பல்வேறு இடங்களில் டூவீலர்களை திருடியதையும் ஒப்புக்கொண்டனர்.அதை தொடர்ந்து அவர்களிடம் இருந்து ஐந்து டூவீலர்களை, போலீஸார் பறிமுதல் செய்தனர். அவற்றின் மதிப்பு, 1.50 லட்சம் ரூபாய். வாலிபர்கள் இருவரையும் போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி