உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / தொழிலாளியை தாக்கிய நான்கு பேர் மீது வழக்கு

தொழிலாளியை தாக்கிய நான்கு பேர் மீது வழக்கு

பள்ளிபாளையம்: வட்டி வாங்குவதில் ஏற்பட்ட தகராறில், நெசவுத் தொழிலாளியை தாக்கிய நால்வர் மீது, பள்ளிபாளையம் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பள்ளிபாளையம் அருகே மாம்பாளையத்தை சேர்ந்தவர் நெசவுத் தொழிலாளி சரவணன் (31). கடந்த நான்கு ஆண்டுக்கு முன் அதே பகுதியை சேர்ந்த மாரியப்பன் என்பவரிடம், 12 ஆயிரம் ரூபாய் பணம் வட்டிக்கு வாங்கியுள்ளார். வாரம், 360 ரூபாய் வீதம் தர வேண்டும் என எழுதி வாங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தொடர்ந்து வட்டி கொடுத்து வந்த சரவணன், அசலை திருப்பி தர முடியாத நிலைக்கு தள்ளப்பட்டார். எனவே, வாரம், 1,000 ரூபாயாக அசலைக் கொடுத்து கழிப்பதாக மாரியப்பனிடம், சரவணன் தெரிவித்துள்ளார். அதற்கு அவர் ஆரம்பத்தில் ஒப்புக் கொண்டு பணம் வாங்கியுள்ளார். இடையில், மாரியப்பன் முரண்டு பிடித்துள்ளார். அதனால், மாரியப்பன், சரவணனுக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அதில், சரவணன் தாக்கப்பட்டார். அதுகுறித்து சரணவன் அளித்த புகாரின் பேரில், மாரியப்பன் உட்பட நால்வர் மீது பள்ளிபாளையம் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி