உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / தி.மு.க., அரசை கண்டித்து பா.ஜ., கண்டன ஆர்ப்பாட்டம்

தி.மு.க., அரசை கண்டித்து பா.ஜ., கண்டன ஆர்ப்பாட்டம்

ப.வேலுார்: நாமக்கல் மாவட்டம், ப.வேலுார் காமராஜர் சிலை அருகே, தி.மு.க., அரசை கண்டித்து பா.ஜ., சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் மார்ச், 2ல் நடக்கிறது.கடந்த, 2019 நாடாளுமன்ற தேர்தலில் காவிரி, திருமணிமுத்தாறு இணைப்பு திட்டத்தை நிறைவேற்றுவோம் என, தி.மு.க., அரசு வாக்குறுதி அளித்தது. அதை நிறைவேற்றாமல் மக்களை ஏமாற்றியதை கண்டித்து, பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை வழிகாட்டுதலின்படி, மாநில துணைத்தலைவர் ராமலிங்கம், மாவட்ட செயலர் சுபாஷ் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுவதாக பா,ஜ., சார்பில் அறிவித்துள்ளனர். விவசாயிகள், பொதுமக்கள், சமூகஆர்வலர்கள் கலந்து கொள்ள அழைப்பு விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை