உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / பா.ஜ.,வில் இணைந்த தி.மு.க., கவுன்சிலர்

பா.ஜ.,வில் இணைந்த தி.மு.க., கவுன்சிலர்

ராசிபுரம்: பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை, கரூர் மாவட்டத்தில் இருந்து சேலம் மாவட்டம் நோக்கி, நேற்று காலை காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது, ராசிபுரம் அடுத்த ஆட்டையாம்-பட்டி பிரிவு ரோடு அருகே, பா.ஜ., தேர்தல் அலுவலகம் அருகே அண்ணாமலை வருகை புரிந்தார். அப்போது, வாகனத்தில் இருந்து இறங்கிய அண்ணாமலையை, சேந்தமங்கலம் டவுன் பஞ்சாயத்து, 12வது வார்டு, தி.மு.க., கவுன்சிலர் ராமச்சந்திரன் மற்றும் அவரது ஆதரவாளர்கள், 11 பேர் நேரில் சந்தித்து தங்-களை, பா.ஜ.,வில் இணைத்துக்கொண்டனர். பா.ஜ.,வில் இணைந்-தவர்களுக்கு, அண்ணாமலை அடையாள அட்டை வழங்கினார். உடன், பா.ஜ., மாநில துணைத்தலைவர் ராமலிங்கம், மாவட்ட தலைவர் சத்தியமூர்த்தி, கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்-டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ