நாமக்கல்: 'மாவட்ட மாணவரணி அமைப்பாளர், துணை அமைப்பாளர் பொறுப்பிற்கு, தகுதியான நபர்கள் விண்ணப்பிக்கலாம்' என, நாமக்கல் கிழக்கு மாவட்ட செயலாளர் ராஜேஸ்குமார் எம்.பி., தெரிவித்துள்ளார். இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை:தி.மு.க., தலைவர் ஸ்டாலின் வழிகாட்டுதல்படி, மாணவரணி செயலாளர் எழிலரசன் அறிவிப்பிற்கு இணங்க, நாமக்கல் கிழக்கு மாவட்டத்தில், ஒன்றிய, நகர, டவுன் பஞ்.,ல் மாணவரணி அமைப்பாளர், துணை அமைப்பாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர். நகர, ஒன்றியம், டவுன் பஞ்., அமைப்பிற்கு, ஒரு அமைப்பாளர், ஐந்து துணை அமைப்பாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.துணை அமைப்பாளர்களில் ஒருவர், ஆதிதிராவிடர் பழங்குடியின இனத்தை சேர்ந்தவராகவும், மற்றும் பெண் துணை அமைப்பாளர் ஒருவரும் இருப்பது அவசியம். ஒரு துணை அமைப்பாளர், கண்டிப்பாக தற்போது கல்லுாரியில் பயிலக்கூடிய மாணவராக இருப்பது அவசியம். இப்பொறுப்புகளில் உள்ள தற்போதைய நிர்வாகிகள், மீண்டும் அப்பொறுப்புகளுக்கு வர விரும்பினால், அவர்களும் விண்ணப்பிக்க வேண்டியது அவசியம். 30 வயதுக்குட்பட்டவர்கள் மட்டும், இப்பொறுப்புகளுக்கு விண்ணப்பிக்க வேண்டும்.நியமிக்கப்படவுள்ள நிர்வாகிகள் அனைவரும், கல்லுாரி, டிப்ளமோ படிப்பை முடித்தவராகவோ அல்லது தற்போது கல்லுாரியில் படிக்கக் கூடியவராகவோ இருப்பது அவசியம்.விண்ணப்பத்தில் கேட்கப்பட்டுள்ள அனைத்து விபரங்களையும் தெளிவாக, முழுமையாக நிரப்பி, பாஸ்போர்ட் அளவு கலர் புகைப்படம் ஒட்டி விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பத்துடன், கழக உறுப்பினர் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை, கல்வி சான்றிதழின் நகல் அவசியம் இணைக்க வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, மாவட்ட கழகம், ஒன்றிய, நகர, டவுன் பஞ்., செயலாளர், மாவட்ட அமைப்பாளர், துணை அமைப்பாளர் ஆகியோரிடம் வழங்கலாம். மேலும், namakkaleast gmail.comஎன்ற மின்னஞ்சல் முகவரியிலோ, வரும், 13 மாலை, 6:00 மணிக்குள் அனுப்ப வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.