உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / மின் நுகர்வோர் குறைதீர் முகாம்

மின் நுகர்வோர் குறைதீர் முகாம்

நாமக்கல்: மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் சிவ-குமார் வெளியிட்ட அறிக்கை:நாமக்கல் மாவட்ட மின் வாரியம் சார்பில் ஒவ்-வொரு மாதமும், மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடத்தப்பட்டு, நுகர்வோர்களிடம் இருந்து, நேரடியாக கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு, தீர்வு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகி-றது.நாமக்கல் மின் பகிர்மான வட்டம் சார்பில், ஜூலை மாதத்திற்கான மின் நுகர்வோர் குறைதீர் முகாம், சம்பந்தப்பட்ட கோட்ட அலுவலகங்-களில் கீழ்கண்டவாறு நடைபெற உள்ளது. அதன்-படி, நாளை காலை, 11:00 மணிக்கு, நாமக்கல் செயற்பொறியாளர் அலுவலகத்தில் குறைதீர் முகாம் நடக்கிறது. 10 காலை, 11:00 மணிக்கு, ப.வேலுார் செயற்பொறியாளர் அலுவலகத்-திலும், 18 காலை, 11:00 மணிக்கு திருச்செங்-கோடு செயற்பொறியாளர் அலுவலகத்திலும், 20 காலை, 11:00 மணிக்கு பள்ளிப்பாளையம் செயற்-பொறியாளர் அலுவலகத்திலும், 24 காலை, 11:00 மணிக்கு ராசிபுரம் மின் வாரிய செயற்பொறி-யாளர் அலுவலகத்திலும் மின் நுகர்வோர் குறைதீர் முகாம் நடக்கிறது. முகாமில், பொது-மக்கள் கலந்துகொண்டு, மின் வினியோகம் சம்-பந்தமான புகார்களை, மேற்பார்வை பொறியாள-ரிடம் நேரடியாக அளித்து, குறைகளுக்கு தீர்வு பெறலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !