உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / மின் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

மின் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

நாமக்கல்: தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின், நாமக்கல்-கரூர் மின் பகிர்மான வட்ட கிளை சார்பில், நாமக்கல்-திருச்செங்கோடு சாலையில் செயல்படும் மேற்பார்வை பொறியாளர் அலுவ-லகம் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது. வட்ட கிளை தலைவர் செல்வகுமார் தலைமை வகித்தார்.இதில், மின்வாரியத்தில் பணியாற்றும் ஒப்பந்த ஊழியர்களுக்கு, நிர்வாகமே நேரடியாக, 380 ரூபாய் தினக்கூலியாக வழங்க வேண்டும். அரசா-ணைப்படி, தடை செய்யப்பட்ட, 19 இடங்களில் பணியாற்றும் ஒப்பந்த ஊழியர்களை பணி நிரந்-தரம் செய்ய வேண்டும்.தி.மு.க., தேர்தல் வாக்குறுதிப்படி, 10 ஆண்டுக-ளுக்கு மேல் பணியாற்றி வரும் ஒப்பந்த தொழி-லாளர்களை நிரந்தரப்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து கோஷம் எழுப்பினர்.கிளை செயலாளர் சவுந்தரராஜன் மற்றும் நிர்-வாகிகள் பழனிவேல், கண்ணன் உள்ளிட்ட மின்-வாரிய ஒப்பந்த ஊழியர்கள் பங்கேற்றனர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி