உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / தமிழில் கையெழுத்திட ஊழியர்கள் உறுதிமொழி

தமிழில் கையெழுத்திட ஊழியர்கள் உறுதிமொழி

ராசிபுரம்: -தமிழ் ஆட்சி மொழி வார விழா, ராசிபுரம் தமிழ் கழகம் சார்பில் ராசிபுரம் ஊராட்சி ஒன்றிய அலு-வலக கூட்டரங்கில் நேற்று நடந்தது. முன்னதாக, ராசிபுரம் அண்ணா சாலையில் தொடங்கிய விழிப்புணர்வு பேரணி, கூட்ட அரங்கில் நிறைவ-டைந்தது. விழாவில், ராசிபுரம் வட்டாரத்திற்கு உட்பட்ட கிராம ஊராட்சி செயலாளர்கள், அங்கன்வாடி ஊழியர்கள், எழுத்தர்கள், வட்டார வளர்ச்சி அலு-வலக அமைச்சு பணியாளர்கள் மற்றும் திருக்-குறள் திட்டத்தின் மாணவ, மாணவியர் பெற்-றோர்கள் என நுாற்றுக்கணக்கானோர் கலந்து-கொண்டனர்.ராசிபுரம் பி.டி.ஓ., பாஸ்கர் மற்றும் கிராம ஊராட்சி பி.டி.ஓ., கஜேந்திர பூபதி ஆகியோர் தலைமை வகித்தனர். ராசிபுரம் தமிழ் கழக தலைவர் தட்சிணாமூர்த்தி வரவேற்றார். செய-லாளரும், பள்ளி துணை ஆய்வாளருமான பெரி-யசாமி பேசினார்.அனைத்து நிலை அலுவலர்கள், அரசு ஊழியர்கள் மற்றும் மாணவர்கள் தமிழ் மொழியை வாழ்வி-யலில் பயன்படுத்த உறுதிமொழி ஏற்றுக் கொண்-டனர். பாரதிதாசன் சாலை நகராட்சி நடுநிலை பள்ளி தலைமையாசிரியர் பாரதி நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை