உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / இடைநின்ற மாணவர்கள் மீண்டும் பள்ளியில் சேர்ப்பு

இடைநின்ற மாணவர்கள் மீண்டும் பள்ளியில் சேர்ப்பு

எலச்சிப்பாளையம், நாமக்கல் மாவட்டத்தில், பள்ளி செல்லா குழந்தைகள், இடை நின்ற குழந்தைகள் கண்டறியப்பட்டு, அவர்களை அந்தந்த வயதிற்கு ஏற்ற பள்ளிகளில் மீண்டும் சேர்க்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி, நாமக்கல் மாவட்டம், எலச்சிப்பாளையம் ஒன்றியத்துக்குட்பட்ட, கொளத்துபாளையம், ஸ்ரீநகர், எலச்சிபாளையம் குட்டைத்தெரு ஆகிய பகுதிகளில் இடை நின்ற மாணவர்கள் கண்டறியப்பட்டனர்.அவர்களை பள்ளி துணை ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில், ஆசிரியர் பயிற்றுனர் முத்துக்குமார், சிறப்பு ஆசிரியர் பெரியசாமி ஆகியோர், இடைநின்ற மாணவர்களின் வீடுக்கு சென்று அவர்களின் பெற்றோர்களிடம், கல்வியின் அவசியம், அரசு வழங்கும் நலத்திட்டங்கள், மாணவ, மாணவியரின் எதிர்காலம் குறித்து விளக்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.தொடர்ந்து, வேலகவுண்டம்பட்டி பஞ்., தொடக்கப்பள்ளியில், சிவன்யா, 4ம் வகுப்பிலும், ராகுல், 3ம் வகுப்பில் சேர்க்கப்பட்டனர். மேலும், வேலகவுண்டம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் ரஞ்சித், பிளஸ் 2, யோகராஜ், பத்தாம் வகுப்பு, சந்தோஷ், சபரி ஆகியோர், 7ம் வகுப்பில் மீண்டும் சேர்த்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை