மேலும் செய்திகள்
முளைப்பாரி காலங்களில் துள்ளு மாவு பிரசாதம்
11-Oct-2024
கம்ப்யூட்டர் காலத்திலும் உரல், அம்மிக்கு கிராக்கிராசிபுரம், நவ. 2-கணினி உலகில் அனைத்துமே நவீனமாகி வருகிறது. கல்வி, விளையாட்டு, பொழுதுபோக்கு, உணவு என, அனைத்து துறைகளிலும் அறிவியல் நுழைந்து வேலைகளை எளிதாக்குகிறது. ஆனால், சமையலை பொறுத்தவரை, விரைவாகவும், எளிதாகவும் சமைக்க எத்தனை உபகரணங்கள் வந்தாலும், சுவையாக சமைக்க நம் பாரம்பரியத்தை நோக்கி தான் செல்கின்றனர். அதுவும், பாரம்பரிய உணவு பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.சில்வர் பாத்திரங்களை ஒதுக்கிவிட்டு பித்தளை, மண் பாண்டங்களுக்கும், மிக்சி, கிரைண்டரை தவிர்த்துவிட்டு ஆட்டுக்கல் உரல், அம்மிக்கும் மாறி வருகின்றனர். முக்கியமாக அசைவ குழம்பு மற்றும் மசாலா வகைக்கு உரலில் ஆட்டி, அம்மியில் அரைத்து வைத்தால் தான் சுவையாக இருக்கும் என்பதால், தற்போது கல் உரல், அம்மிக்கு மாறி வருகின்றனர்.ராசிபுரத்தில் இருந்து சேலம் செல்லும் சாலையில், ஆர்.டி.ஓ., அலுவலகம் அருகே, 5க்கும் மேற்பட்ட கல் உரல் தயார் செய்யும் கடைகள் உள்ளன. இங்கு, சிறிய அம்மி, உரல், மஞ்சள் தேய்க்கும் கல் ஆகியவை விற்கப்படுகிறது. பெரிய உரல், 3,000 ரூபாய், சிறிய உரல், 500 ரூபாயிலிருந்து, 1,000 ரூபாய் வரை விற்கப்படுகிறது. பெரிய அம்மிக்கல், 2,000 ரூபாய், சிறிய கற்கள், 750 ரூபாய் முதல் விற்கப்படுகிறது. அதேபோல், மஞ்சள் தேய்க்கும் கல், 200 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.பெரிய உரல், அம்மி ஆகியவைக்கு உள்ளூரில் இருந்து வெட்டப்படும் கருங்கற்கள் பயன்படுத்தப்படுகிறது. சிறிய வகை பொருட்களுக்கு கோயமுத்துார் அருகேயுள்ள ஊத்துக்குளி என்ற பகுதியில் இருந்து வாங்கி வரும் மாவுக்கல் ரகத்தை சேர்ந்த கற்களை பயன்படுத்துகின்றனர். முதலில் இப்பகுதியில் ஒரு கடை மட்டும் இருந்தது. தற்போது, 5 கடைகளுக்கு மேல் உள்ளன. 10க்கும் மேற்பட்ட ஆண், பெண்கள் வேலை செய்து வருகின்றனர். அதே இடத்தில் உரல், அம்மிகளை செதுக்கி தருகின்றனர். மேலும், பழைய கல்லுக்கு அரைப்பதற்கு வசதியாக கொத்து போட்டு தருகின்றனர்.
11-Oct-2024