ப.வேலுா:நாமக்கல் மாவட்டம், ப.வேலுார் அதன் சுற்றுவட்டாரங்களில் விவசாயிகள் வெள்ளைக்கொடி, கற்பூரி வெற்றிலை சாகுபடி செய்துள்ளனர். விளைந்த வெற்றிலைகளை பறித்து, 100 வெற்றிலையை ஒரு கவுளியாகவும், 104 கவுளியை ஒரு சுமையாகவும் கட்டுகின்றனர். பாண்டமங்கலம், பொத்தனுார், ப.வேலுார் பகுதிகளில் செயல்படும் வெற்றிலை மார்க்கெட்டில் விற்பனை செய்கின்றனர்.கடந்த மாதம், 'இளம்பயிர்' ரகமான வெள்ளைக்கொடி வெற்றிலை சுமை, 8,000 ரூபாய், கற்பூரி, 4,500, 'முதிகால்' ரகத்தில் வெள்ளைக்கொடி, 4,000, கற்பூரி, 1,500 ரூபாய்க்கு விற்றது. ஆனால், நேற்று முன்தினம் நடந்த ஏலத்தில் 'இளங்கால்' வெள்ளைக்கொடி சுமை, 7,000 ரூபாய், கற்பூரி, 3,500, 'முதிகால்' வெள்ளைக்கொடி, 3,000, கற்பூரி, 1,200 ரூபாயாக சரிந்தது. தற்போது, பருவநிலை மாற்றத்தால் வெற்றிலை விளைச்சல் அதிகரித்தபோதும் முகூர்த்த நாட்கள் இல்லாததால் வெற்றிலை விலை சரிந்ததால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.