உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / விவசாயிகள் குறைதீர் கூட்டம்; சங்க பிரதிநிதிகளுக்கு அழைப்பு

விவசாயிகள் குறைதீர் கூட்டம்; சங்க பிரதிநிதிகளுக்கு அழைப்பு

நாமக்கல்: 'விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், நாளை நடக்கிறது' என, நாமக்கல் கலெக்டர் உமா தெரிவித்துள்ளார்.இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை: நாமக்கல் மாவட்டத்தில், இம்மாதத்திற்கான விவசாயிகள் குறை-தீர்க்கும் நாள் கூட்டம், மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதி விவசாயிகளும் பயன்பெறும் வகையில், கலெக்டர் அலுவல-கத்தில், நாளை (ஜூலை, 26), காலை, 10:30 மணிக்கு நடக்கிறது. கலெக்டர் உமா தலைமை வகிக்கிறார். கூட்டத்தில், வேளாண் அறிவியல் நிலைய தொழில்நுட்ப வல்லு-னர்கள் பங்கேற்று, பருத்தியில் அடர் நடவு சாகுபடி முறை குறித்து, விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகளுக்கு விளக்க உள்ளனர்.மேலும், கூட்டத்தின் மூலம் வேளாண் இடு பொருள் இருப்பு விபரங்கள், வேளாண் உழவர் நலத்துறை மற்றும் இதர துறை-களில் செயல்படுத்தப்பட்டு வரும் மானிய திட்டங்கள் குறித்து அறிந்து கொள்வதுடன், தங்களது கோரிக்கைகளையும் தெரிவிக்-கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை