ப.வேலுார்: ப.வேலுார் சுற்று வட்டார பகுதிகளில், 3,000 ஏக்க-ருக்கும் அதிகமாக வெற்றிலை சாகுபடி செய்யப்-படுகிறது. இங்கு கற்பூரம், வெள்ளைமார் உள்-ளிட்ட ரகங்கள் பயிரிடப்பட்டுள்ளது. 100 வெற்-றிலை கொண்டது ஒரு கவுளியாகவும், 104 கவுளி கொண்டது ஒரு சுமையாகவும் கட்டுகின்றனர். அறுவடைசெய்யப்பட்ட வெற்றிலைகளை, ப.வேலுாரில் உள்ள, தினசரி ஏலமண்டியில் விற்-பனை செய்யப்படுகிறது.நாமக்கல், சேலம், கரூர், ஈரோடு, திண்டுக்கல், மதுரை போன்ற மாவட்டங்களை சேர்ந்த வியா-பாரிகள், போட்டி போட்டு ஏலம் எடுக்கின்றனர். தற்போது, பனி போன்ற காரணங்களால், வெற்-றிலை உற்பத்தி குறைத்தது. அதனால், நேற்று நடந்த ஏலத்துக்கு வெற்றிலை குறைந்தளவே கொண்டுவரப்பட்டது.கடந்த வாரம், 104 கவுளி கொண்ட, 'இளங்கால்' வெள்ளைக்கொடி, ஒரு சுமை, 8,000 ரூபாய்க்கும், கற்பூரி வெற்றிலை ஒரு சுமை, 5,000 -ரூபாய்க்கும் விற்பனையானது. இதேபோல், 'முதிகால்' வெள்ளைக்கொடி வெற்றிலை, ஒரு சுமை, 4,000 ரூபாய்க்கும், கற்பூரி வெற்றிலை ஒரு சுமை, 2,500 ரூபாய்க்கும் விற்பனையானது.நேற்று நடந்த ஏலத்தில், 'இளங்கால்' வெள்ளைக்-கொடி, 10,000 ரூபாய், கற்பூரி வெற்றிலை, 6,000 ரூபாய்; 'முதிகால்' வெள்ளைக்கொடி, 5,500 ரூபாய், கற்பூரி வெற்றிலை, 3,500 ரூபாய்-க்கு விற்பனையானது. விலை உயர்வால் வெற்-றிலை சாகுபடி செய்த விவசாயிகள் மகிழ்ச்சிய-டைந்துள்ளனர்.