உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / பிப்., 25ல் முதலீட்டு மீட்பு முதல் மாநாடு: விவசாய முன்னேற்ற கழக தலைவர் தகவல்

பிப்., 25ல் முதலீட்டு மீட்பு முதல் மாநாடு: விவசாய முன்னேற்ற கழக தலைவர் தகவல்

மோகனுார்: ''விவசாய முன்னேற்ற கழகம் சார்பில், வரும் பிப்., 25ல், முதலீட்டு மீட்பு முதல் மாநில மாநாடு நடக்கிறது,'' என, அதன் நிறுவன தலைவர் செல்ல ராசாமணி கூறினார். விவசாய முன்னேற்ற கழக ஆலோசனை கூட்டம், மோகனுாரில் நடந்தது. அதன் நிறுவன தலைவர் செல்ல ராசாமணி தலைமை வகித்தார். பொதுச்செயலாளர் பாலசுப்ரமணியன் முன்னிலை வகித்தார்.கூட்டத்திற்கு பின், நிறுவன தலைவர் செல்ல ராசாமணி கூறியதாவது: வரும் பிப்., 25ல், விவசாய முன்னேற்ற கழகம், பி.ஏ.சி.எல்., முதலீட்டாளர்கள், களப்பணியாளர்கள் இணைந்து, நிறுவனத்தில் முதலீடு செய்துள்ள, 49,000 கோடி ரூபாய், முதலீட்டாளர்களுக்கு திரும்ப பெற வலியுறுத்தி, பி.ஏ.சி.எல்., முதலீட்டு மீட்பு முதல் மாநாடு, நாமக்கல் - திருச்சி மாவட்ட எல்லையில் நடக்கிறது.கூட்டத்தில், பி.ஏ.சி.எல்., நிறுவனத்தின் முதலீட்டு பணத்தை திரும்பி தரப்படும் என எந்த கட்சி தேர்தல் வாக்குறுதிகளில் இடம் பெறுகிறதோ, அந்த கட்சிக்கு ஆதரவு அளிப்பது குறித்து முடிவு எடுக்கப்படும். தேர்தல் வாக்குறுதியில் இடம் பெறாத பட்சத்தில், பி.ஏ.சி.எல்., நிறுவனத்தின் முதலீட்டாளர்கள், களப்பணியாளர்களுடன் இணைந்து, விவசாய முன்னேற்ற கழகம் தேர்தலில் போட்டியிட்டு, கோரிக்கை முதலீட்டு பணத்தை திரும்ப தர வலியுறுத்தி லோக்சபாவில் எங்கள் குரலை ஒலிக்க செய்வோம்.பி.ஏ.சி.எல்., நிறுவனத்தின் முதலீட்டு பணத்தை திரும்ப கொடுக்கும் கட்சிக்கு ஆதரவு அளிக்கப்படும். நாடு முழுவதும், அரசு ஊழியர்கள் உள்பட, 5.85 கோடி பேர், 49,000 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளனர்.தமிழகத்தில் ஒருகோடி பேர், 10,000 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளனர். உச்சநீதிமன்றம் இந்த வழக்கை விசாரித்து ஓய்வு பெற்ற நீதிபதியை நியமித்தது. ஆறு மாத காலத்தில், முதலீடு செய்தவர்களுக்கு பணத்தை வட்டியுடன் செலுத்த உச்சநீதிமன்றம் அறிவித்தது. வாழ்வாதாரத்தை பாதிக்கின்ற வகையில் உள்ள இந்த வழக்கை மத்திய அரசும், உச்சநீதிமன்றமும் விரைந்து முடித்து முதலீட்டாளர்களுக்கு சேர வேண்டிய பணத்தை வட்டியுடன் வழங்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை