உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / ப.பாளையத்தில் எஸ்.ஐ.ஆர்., பணி முன்னாள் அமைச்சர் தங்கமணி ஆய்வு

ப.பாளையத்தில் எஸ்.ஐ.ஆர்., பணி முன்னாள் அமைச்சர் தங்கமணி ஆய்வு

பள்ளிப்பாளையம்: பள்ளிப்பாளையத்தில் நடந்த வாக்காளர் பட்டியல் சிறப் தீவிர திருத்த பணியை, முன்னாள் அமைச்சரும், எம்.எல்.ஏ.,வுமான தங்கமணி ஆய்வு செய்தார்.குமாரபாளையம் தொகுதியில் உள்ள அனைத்து ஓட்டுச்சாவடி மையங்களிலும், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணி நடந்து வருகிறது. ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள், படி-வங்களை வழங்கி பூர்த்தி, செய்யப்பட்ட படிவங்களை பெற்று வருகின்றனர். இப்பணியில், வாக்காளர்களுக்கு உதவி செய்யும் வகையில், அ.தி.மு.க.,வினர் ஈடுபட்டு வருகின்றனர். இப்பணிகளை, முன்னாள் அமைச்சரும், எம்.எல்.ஏ.,வுமான தங்கமணி, நேற்று முன்தினம் நேரில் சென்று ஆய்வு செய்தார். அங்கு, படிவங்களை பூர்த்தி செய்யும் பணியில் ஈடுபட்ட, அ.தி.மு.க., ஓட்டுச்சாவடி முகவர்களிடம் பணிகள் குறித்து கேட்-டறிந்தார். அப்போது, ''வாக்காளர்கள் யாரும் விடுபடாமல், அனைவருக்கும் படிவங்களை வழங்கி, பூர்த்தி செய்து நிலைய அலுவலரிடம் வழங்க வேண்டும்,'' என, கேட்டுக்கொண்டார்.பள்ளிப்பாளையம் ஊராட்சி ஒன்றிய முன்னாள் சேர்மன் செந்தில், ஆலாம்பாளையம் டவுன் பஞ்., செயலாளர் செல்ல-துரை மற்றும் கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ