உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / மாஜி கிராம உதவியாளர் தடுமாறி விழுந்து உயிரிழப்பு

மாஜி கிராம உதவியாளர் தடுமாறி விழுந்து உயிரிழப்பு

புதுச்சத்திரம்,புதுச்சத்திரம் அருகே, பாச்சல் மாதா கோவில் ‍தெருவை சேர்ந்தவர் பழனிசாமி, 75; ஓய்வு பெற்ற கிராம உதவியாளர். இவர், கடந்த, 11ல் டூவீலரில் கடைக்கு சென்றார். அப்போது, தண்ணீர் டேங்க் அரு‍கே சென்றபோது திடீரென நிலைதடுமாறி கீழே விழுந்தார். இதனால், அங்கிருந்த உறவினர்கள், '108' அவசரகால ஆம்புலன்ஸில் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள், தலையில் கட்டி இருப்பதாகவும், அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் ‍என தெரிவித்தனர். தொடர்ந்து சிகிச்சையில் இருந்த அவர், உயிரிழந்தார். புதுச்சத்திரம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை