உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / பெருமாள் கோவிலில் பவுர்ணமி வழிபாடு

பெருமாள் கோவிலில் பவுர்ணமி வழிபாடு

எலச்சிபாளையம்: சித்தாளந்துார், திருவேங்கட பெருமாள் சுவாமி கோவிலில் மாசிமாத பவுர்ணமி சிறப்பு பூஜைகள் நடந்தன.எலச்சிபாளையம் அடுத்த, சித்தாளந்துாரில் பிரசித்தி பெற்ற திருவேங்கடபெருமாள் சுவாமி கோவிலில் நேற்று, மாசிமாத பவுர்ணமி தினத்தை முன்னிட்டு, மூலவரான ஸ்ரீதேவி, பூதேவி சமேத திருவேங்கடபெருமாள் சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, அபி ேஷக ஆராதனை நடந்தது. அதேபோல், கோவில் உட்பிரகாரத்தில் உள்ள விநாயகர், கருடாழ்வார், ராகு, கேது, பக்த ஆஞ்சநேயர், யோகநரசிம்மர், ஹயக்ரீவர், தன்வந்திரி உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கும் சிறப்பு அபி ேஷக ஆராதனை நடந்தது. பல்வேறு மாவட்டங்களிலிருந்து வந்த பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து, கோவிந்தா கோஷம் முழங்க சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை