உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / குதிரை ரேக்ளா: அனுமதி கேட்டு மனு

குதிரை ரேக்ளா: அனுமதி கேட்டு மனு

நாமக்கல்: 'பெருமாள் கோவில் திருத்தேர் பெருவிழாவை முன்னிட்டு, குதிரை ரேக்ளா போட்டி நடத்த அனுமதி அளிக்க வேண்டும்' என, மாவட்ட குதிரை ரேக்ளா சங்க தலைவர் பாலகிருஷ்ணன், நாமக்கல் கலெக்டரிடம் மனு அளித்துள்ளார்.சேந்தமங்கலத்தில் பிரசித்தி பெற்ற பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும், தேர்த்திருவிழா வெகுவிமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி, இந்தாண்டு விழா, வரும், பிப்.,யில் நடக்கிறது. விழாவை முன்னிட்டு, பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படும். இந்நிலையில், கோவில் தேர்த்திருவிழாவை முன்னிட்டு, வரும் பிப்., 22ல், குதிரை ரேக்ளா போட்டி நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதற்கு அனுமதி வழங்க கோரி, நாமக்கல் மாவட்ட குதிரை ரேக்ளா சங்க தலைவர் பாலகிருஷ்ணன், நாமக்கல் கலெக்டரிடம் மனு அளித்துள்ளார்.அந்த மனுவில் கூறியிருப்பதாவது: நாமக்கல் மாவட்ட குதிரை ரேக்ளா சங்கம் சார்பில், வரும் பிப்., 22ல், சேந்தமங்கலம், பெருமாள் கோவில் திருத்தேர் பெருவிழாவை முன்னிட்டு, குதிரை வண்டி பந்தயம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதற்கு, அனுமதி வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை