உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / சிமென்ட் சீட்டுகளை திருடிய இட்லி கடைக்காரர் கைது

சிமென்ட் சீட்டுகளை திருடிய இட்லி கடைக்காரர் கைது

நாமக்கல்: சேந்தமங்கலம், காந்திபுரத்தை சேர்ந்தவர் கலை-வாணன், 37; மூன்றாண்டுகளாக, நாமக்கல்-எரு-மப்பட்டி சாலை விரிவாக்க பணி நடந்து வருகி-றது. இதில் மேற்பார்வையாளராக இருந்து-கொண்டு, சாலை அமைக்கும் பணிக்கு தேவை-யான உபகரணங்களை சப்ளை செய்து வருகிறார். அவர், நேற்று முன்தினம் மாலை, 5:00 மணிக்கு, துாசூர் ஏரிக்கரை பகுதிக்கு தண்ணீர் விடுவதற்-காக சென்றுள்ளார். அப்போது, அங்கு சந்தேகத்-திற்கு இடமாக ஆம்னி வேன் ஒன்று நின்று கொண்டிருந்தது.அதில், 40 சிமென்ட் சீட்டுகள் ஏற்றப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். ஆம்னி வேனில் இருந்து இருவரில், ஒருவர் தப்பி ஓடிவிட்டார். மற்றொருவரை மடக்கி பிடித்து விசாரணை நடத்தியதில், நாமக்கல் செல்லப்பாகாலனியை சேர்ந்த சுரேஷ், 48 என்பதும், இட்லி கடை நடத்தி வருவதும் தெரியவந்தது. அவரை நாமக்கல் போலீசில் ஒப்படைத்தார். வழக்குப்பதிவு செய்த போலீசார், சுரேசை கைது செய்தனர். அவரிடம் இருந்து, 20,000 ரூபாய் மதிப்புள்ள சிமென்ட் சீட்டுகளை பறிமுதல் செய்-தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை