நாமக்கல்: 'தமிழக அரசு, 2021ல் தேர்தல் வாக்குறுதிப்படி, பழைய ஓய்வூதிய திட்டத்தை உடனே அறிவிக்க வேண்டும்' என்பது உள்ளிட்ட, 10 அம்ச கோரிக்-கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, ஜாக்டோ ஜியோ அமைப்பினர், பல்வேறு போராட்டங்-களில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்நிலையில், கோரிக்கை நிறைவேற்றாததை கண்டித்து, வரும், 2026 ஜன., 6 முதல், காலவரை-யற்ற வேலை நிறுத்த போராட்டத்தை அறிவித்-துள்ளனர். அதற்கான ஆயத்த கூட்டம், நாமக்-கல்லில் நேற்று நடந்தது.மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் பழனியப்பன், சங்கர், முருகேசன் ஆகியோர் தலைமை வகித்-தனர். மாநில ஒருங்கிணைப்பாளர் சண்முகம் பங்கேற்று கோரிக்கை குறித்து விளக்கி பேசினார். கூட்டத்தில் பங்கேற்றவர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்திருந்தனர்.கடந்த, 2021-ல், தேர்தல் வாக்குறுதிப்படி, பழைய ஓய்வூதிய திட்டத்தை உடனே அறிவிக்க வேண்டும். ஆசிரியர் தகுதித்தேர்வு அச்சுறுத்-தலில் இருந்து விலக்களித்து, தமிழக அரசு சீராய்வு மனு உள்ளிட்ட நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.இடைநிலை, முதுகலை, உயர்நிலை, மேல்நி-லைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும், உடற்-கல்வி இயக்குனர், உடற்கல்வி ஆசிரியர்களுக்கு, மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும்.பகுதிநேர ஆசிரியர்கள், பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். காலி பணியிடங்-களை உடனே நிரப்ப வேண்டும் என்பன உள்-ளிட்ட, 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.