உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / இணையதள மூலம் வழக்கின் கோப்பு பதிவு செய்யும் இடத்தை நீதிபதி ஆய்வு

இணையதள மூலம் வழக்கின் கோப்பு பதிவு செய்யும் இடத்தை நீதிபதி ஆய்வு

குளித்தலை: குளித்தலை, ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் வழக்குகளை இணைய தள வழியில் பதிவு செய்தல் தொடர்பாக கட்டுமான இடத்தை மாவட்ட முதன்மை நீதிபதி பார்வையிட்டார்.குளித்தலை ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் சார்பு நீதிமன்றம், மாவட்ட உரிமையியல் நீதிமன்றம், மாவட்ட உரிமையியல் கூடுதல் நீதிமன்றம், குற்றவியல் நடுவர் எண் 1, நடுவர் 2 ஆகிய நீதிமன்றங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த நீதிமன்றத்தில், வழக்குகளை இணைய தளத்தின் வழியில் கோப்புகளை பதிவு செய்வது சம்பந்தமான, கட்டுமான இடத்தினை மாவட்ட முதன்மை நீதிபதி சண்முகசுந்தரம் பார்வையிட்டார்.இந்நிகழ்ச்சியில் சார்பு நீதிமன்ற நீதிபதி சண்முக கனி, மாவட்ட உரிமையியல் நீதிமன்ற நீதிபதி பாலமுருகன், குற்றவியல் நீதிமன்ற நீதிபதி பிரகதீஸ்வரன், அரசு வக்கீல் சாகுல் ஹமீது, முன்னாள் அரசு வக்கீல்கள் கலைச்செல்வன், காஜாமொய்தீன் மற்றும் பொதுப்பணித்துறை (கட்டடம்) எஸ்.டி.ஓ., சரோஜினி, உதவி பொறியாளர் செந்தில்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை