| ADDED : பிப் 16, 2024 10:42 AM
திருச்செங்கோடு: திருச்செங்கோடு, கே.எஸ்.ஆர். கல்வி குழுமத்தின் சார்பாக, ரங்உத்சவ்-24 தேசிய அளவிலான தொழில்நுட்பக் கலை திருவிழா கடந்த, 14 துவங்கி வரும், 17 வரை நடக்கிறது.கே.எஸ்.ஆர். கல்வி நிறுவனங்களின் தாளாளர் சீனிவாசன் துவக்கி வைத்தார். மாணவ, மாணவிகளுக்கு பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன. புதுடில்லி அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கழக முதன்மை ஒருங்கிணைப்பு அலுவலர் மற்றும் தனி நிறுவனத்தின் தலைமை நிர்வாக அலுவலர் முனைவர். புத்த சந்திரசேகர், இந்தியா லீட், சோஷியல் இன்னோவேஷன் குரூப், சிஸ்கோ நிறுவன தலைவர் இஷ்வந்தர் சிங், போதை பொருள் தடுப்பு ஆணையர் அரவிந்தன் ஐ.பி.எஸ்., மற்றும் உலக சாதனை அமைப்பின் மேலாளர் கிறிஸ்டோபர் டெய்லர் கிராப்ட் ஆகியோர் சிறப்பாளர்களாக கலந்து கொண்டனர்.போதை பொருட்கள் ஒழிப்பிற்காக, கே.எஸ்.ஆர். கல்வி நிறுவன மாணவர்கள், 48 மணி நேரத்தில் 44,000க்கும் மேற்பட்டோர் தொடர் உறுதிமொழி ஏற்று உலக சாதனை நிகழ்த்தியதற்கான அறிக்கையை அறிவித்து சான்றிதழ் வழங்கினர். கல்வி நிறுவனங்களின் தலைமை நிர்வாக அலுவலர் முனைவர் அகிலா முத்துராமலிங்கம், ரங்உத்சவ் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் முனைவர் கோபாலகிருஷ்ணன் மற்றும் முதல்வர்கள், இயக்குனர்கள் கலந்து கொண்டனர்.கேப்ஜெமினி அதிகாரி மைக்முரளி, நடிகர்கள் சூரி, சதீஷ், நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், பாடகர்கள் கார்த்திக், பிரதீப்குமார் ஆகியோர் பார்வையாளர்களை மகிழ்வித்தனர்.