உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / காளியம்மன் கோவில் கும்பாபிஷேகம்

காளியம்மன் கோவில் கும்பாபிஷேகம்

பள்ளிப்பாளையம்: குமாரபாளையம் காளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா, நேற்று கோலாகலமாக நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.குமாரபாளையம் காளியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழா கடந்த, 16ல் கிராம சாந்தி பூஜையுடன் துவங்கியது. கணபதி பூஜை, பூர்வாங்க பூஜைகள் நடத்தப்பட்டு, காவிரி ஆற்றிலிருந்து தீர்த்தக்குடம் எடுத்து வரப்பட்டது.தொடர்ந்து, நவகிரக ஹோமம், பூமி பூஜை செய்து மண் எடுத்தல், அஷ்ட லட்சுமி ஹோமம், முதற்கால யாக சாலை பூஜைகள் நடந்தன. 20 காலை, இரண்டாம் கால யாக சாலை பூஜை, மாலை மூன்றாம் கால யாக சாலை பூஜை நடந்தது. நேற்று காலை, 6:30 மணிக்கு நான்காம் கால பூஜை நடந்தது. தொடர்ந்து மகா கும்பாபிஷேக விழா நடந்தது. இதில், கோபுர கலசங்களுக்கு, சிவாச்சாரியார்கள் புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தினர். விழாவில், ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ