உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / ரூ.1.43 கோடியில் 336 பெண்களுக்கு திருமண உதவித்தொகை: வனத்துறை அமைச்சர் வழங்கல்

ரூ.1.43 கோடியில் 336 பெண்களுக்கு திருமண உதவித்தொகை: வனத்துறை அமைச்சர் வழங்கல்

நாமக்கல் : நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில், திருமண உதவித்தொகை, தாலிக்கு தங்கம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. கலெக்டர் உமா தலைமை வகித்தார். எம்.எல்.ஏ., ஈஸ்வரன், நகரமைப்பு மண்டல திட்டக்குழு உறுப்பினர் மதுரா செந்தில் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வனத்துறை அமைச்சர் மதிவேந்தன், நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.தொடர்ந்து அவர் பேசியதாவது:தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் ஆட்சி பொறுப்பேற்றவுடன், மகளிருக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். முன்னாள் முதல்வர் கருணாநிதி, பெண்களுக்கு சொத்தில் சம உரிமை சட்டத்தை கொண்டு வந்து, பெண்களுக்கு பெருமை சேர்த்தார். இலவச காஸ் இணைப்பு வழங்கினார். மகளிர் சுய உதவிக்குழு திட்டத்தை தொடங்கி வைத்தார். மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு, 25,000 கோடி ரூபாய் கடனுதவி வழங்கப்பட்டுள்ளது. மேலும், மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு, 1,000 கோடி ரூபாய் கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.பெண்கள் முன்னேறினால் தான், மாநிலம் முன்னேறும் என்பதை கருத்தில் கொண்டு, மகளிரின் தொழில் மேம்பாட்டிற்காக, 30,000 கோடி ரூபாய் கடனுதவி வழங்கப்பட உள்ளது என, தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி அறிவித்துள்ளார்.தற்போது, 336 ஏழை பெண்களுக்கு, 1.43 கோடி ரூபாய் மதிப்பில், திருமண நிதியுதவியுடன், தலா, 8 கிராம் வீதம், 2,688 கிராம் தாலிக்கு தங்கம் வழங்கப்பட்டுள்ளது. அவற்றை, நல்ல முறையில் பயன்படுத்திக்கொண்டு, தங்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்திக்கொள்ள வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.மாவட்ட சமூக நல அலுவலர் (பொ) மோகனா, உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசுத்துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை