| ADDED : பிப் 23, 2024 01:45 AM
நாமக்கல்;நாமக்கல்லில், நேற்று தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பின் நிர்வாகிகள் மற்றும் இணைப்பு சங்க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. மாநில தலைவர் விக்கிரமராஜா கலந்து கொண்டார். மாவட்ட தலைவர் ஜெயக்குமார் வெள்ளையன் தலைமை வகித்தார். மூத்த நிர்வாகி பெரியசாமி, மாவட்ட செயலாளர் பொன் வீரக்குமார், சேலம் மாவட்ட தலைவர் பெரியசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.தொடர்ந்து, விக்கிரமராஜா கூறியதாவது:ஆன்லைன் வர்த்தகத்திற்கும், பெரும் கார்ப்பரேட் வர்த்தக நிறுவனங்களுக்கும் மத்திய, மாநில அரசுகள் அனுமதி வழங்கக் கூடாது. இதனால் சிறு வியாபாரிகள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். அதுமட்டுமின்றி, ஆன்லைனில் மக்களை ஏமாற்றும் வகையில் மோசடிகள் நடக்கின்றன. 17 சதவீதம் வணிகத்தை சுரண்டி விட்டனர். மீதமுள்ள, 83 சதவீத வணிகத்தையும் எங்களிடம் இருந்து ஆன்லைன் நிறுவனங்கள் சுரண்டும் அபாயம் உள்ளது. பாமாயில் விற்பனையை தடை செய்ய வேண்டும். விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த, அரசு வியாபாரிகள் மீது போடப்படும் வரி விதிப்பை குறைக்க வேண்டும். மின் கட்டணம், வாடகை, குப்பை வரி, சொத்து வரி ஆகியவற்றின் உயர்வால் தான் விலைவாசி உயர்கிறது. தேர்தலையொட்டி வணிகர்களின் ஆதரவை கேட்கும் அரசியல் கட்சிகளிடம், எங்களுடைய இந்த கோரிக்கைகளை தெரிவித்துள்ளோம். மதுரையில் மே, 5ல், 'வணிகர் விடுதலை முழக்க மாநாடு' என்ற தலைப்பில் எங்களுடைய பேரமைப்பு சார்பில், 41வது மாநில மாநாட்டை நடத்த இருக்கிறோம்.இவ்வாறு அவர் பேசினார்.