உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / துணை சபாநாயகர் பங்கேற்பு பஸ் போக்குவரத்து துவக்கம்

துணை சபாநாயகர் பங்கேற்பு பஸ் போக்குவரத்து துவக்கம்

ராசிபுரம்: ராசிபுரம் அடுத்த மங்களபுரம், அறமத்தாம்பாளையம் பகுதியில் நடந்த விழாவில், இரண்டு புதிய வழித்தட பஸ் போக்குவரத்தை, சட்டசபை துணை சபாநாயகர் தனபால் துவக்கி வைத்தார். வாழப்பாடியில் இருந்து நாகப்பட்டினம் வரை சென்று கொண்டிருந்த அரசு பஸ்சை, அண்ணாநகர் வரை நீட்டிக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வந்தனர். அதேபோல், வாழப்பாடி முதல் சிங்கிலியன்கோம்பை வரை சென்று கொண்டிருந்த அரசு பஸ்சை, விளாரிப்பாளையம், ஈஸ்வரமூர்த்திபாளையம், ஒண்டிக்கடை வழியாக இயக்க வேண்டும் என்றும், அப்பகுதியை சேர்ந்த கிராம மக்கள், அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். அதைதொடர்ந்து, அந்த இரண்டு புதிய வழித்தடத்திலும் பஸ்கள் இயக்கப்பட்டன. அதற்கான விழா, வெண்ணந்தூர் அடுத்த அறமத்தாம்பாளையத்தில் நடந்தது. துணை சபாநாயகர் தனபால் தலைமை வகித்து, புதிய வழித்தட பஸ் போக்குவரத்தை துவக்கி வைத்தார்.சேலத்தில் இருந்து ஓ.சவுதாபுரம் வரை சென்று கொண்டிருந்த அரசு பஸ், அறமத்தாம்பாளையம் வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. நிகழ்ச்சியில், அரசு அதிகாரிகள், அ.தி.மு.க., நிர்வாகிகள், உறுப்பினர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி