உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / மக்கள் கடும் அவதி இருளில் செயல்படும் வி.ஏ.ஓ., ஆஃபீஸ்

மக்கள் கடும் அவதி இருளில் செயல்படும் வி.ஏ.ஓ., ஆஃபீஸ்

ப.வேலூர்: மின் கட்டணம் செலுத்தாததால், பொத்தனூர் வி.ஏ.ஓ., அலுவலகத்துக்கான மின் இணைப்பை, மின்வாரிய அதிகாரிகள் துண்டிப்பு செய்தனர். அதனால், கடந்த ஆறு மாத காலமாக, மாலை வேளையில் வி.ஏ.ஓ., அலுவலகம் இருளில் செயல்படும் பரிதாப நிலையில் உள்ளது. ப.வேலூர் அருகே பொத்தனூர், எம்.ஜி.ஆர்., சிலை அருகே வி.ஏ.ஓ., அலுவலகம் உள்ளது. அந்த அலுவலகத்துக்கு கடந்த, 2010ம் ஆண்டு அக்டோபர் மாதம் வி.ஏ.ஓ., வேலாயுதம் இடமாற்றம் செய்யப்பட்டார். அவர் பொறப்பேற்ற இரண்டு மாதத்தில் அலுவலக மின் கட்டணம், 4,300 ரூபாய் வந்துள்ளது.

அதிர்ச்சியடைந்த வி.ஏ.ஓ., வேலாயுதம், கட்டணம் அதிகமாக உள்ளதால் செலுத்த இயலாது எனத் தெரிவித்துள்ளார். அதையடுத்து, அந்த அலுவலக மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. அதனால், அந்த வி.ஏ.ஓ., அலுவலகம் மாலை வேளைகளில் இருளில் மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் செயல்பட்டு வருகிறது. பகல் பொழுதில் மின்சாரம் இல்லாததை சமாளிக்கும் வி.ஏ.ஓ., மாலை வேளையில் மின் விளக்கு இல்லாததால், அங்கு பல்வேறு பணிக்கு வரும் மக்களுக்கும், அவர்களது தேவையை நிறைவு செய்ய முடியாத நிலைக்கு வி.ஏ.ஓ., வேலாயுதம் தள்ளப்பட்டுள்ளார். அதனால், மக்கள் மாலை வேளையில் சான்றிதழ் உள்ளிட்ட எந்த அலுவலுக்கும் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை